என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புத்தக திருவிழா
நீங்கள் தேடியது "புத்தக திருவிழா"
அரியலூரில் புத்தகதிரு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூரில் அரசு மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் சார்பில் 4-வது புத்தக திருவிழா நடை பெறுகிறது. 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் புத்தக திருவிழாவை தொடக்கி வைக்கிறார். அரசு தலைமை கொறடா, எம்.பி, எம்.எல் .ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 12-ம் தேதி தமிழக பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொள்கிறார்.
இதனை முன்னிட்டு அண்ணாசிலையிலிருந்து புத்தக திருவிழா விழிப்புணர்வு பேரணியை கோட்டாட்சி தலைவர் சத்திய நாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார், முக்கிய கடைவீதிகளின் வழியாக சென்ற பேரணி அரியலூர் யூனியன் அலுவலகத்தில் முடிவடைந்தது.
தாசில்தார் முத்துலெட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்செல்வம், மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பொய்யாமொழி, தமிழ் பாண்பாட்டு பேரமைப்பு பொறுப்பாளர்கள் ராமசாமி, பாலகிருஷ்ணன், நல்லப்பன், புலவர்.இளங்கோ, ஜமீன்வெங்கடேசன், அரிமா சங்க பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, அசோக்குமார், கோகுல், சங்கர், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
×

X